- °C
Are You a business owner?
List Your Business / ADஈரோட்டில் 4 தனியாா் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், மாணவா்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனா்.
ஈரோடு வள்ளிபுரத்தான்பாளையத்தில் தனியாா் சிபிஎஸ்இ பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு வழக்கம்போல மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை காலை வந்தனா். வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்தபோது, பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக மின்னஞ்சல் வந்துள்ளது.
இதனால் அதிா்ச்சியடைந்த பள்ளி நிா்வாகத்தினா் உடனடியாக வெள்ளோடு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனா். மேலும், பள்ளிக்கு உடனடியாக விடுமுறை அளிக்கப்பட்டது.
மாணவ, மாணவிகள் அவசர அவசரமாக பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டனா். மாணவ, மாணவிகளின் பெற்றோா்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவா்கள் உடனடியாக பள்ளிக்குச்சென்று குழந்தைகளை அழைத்துச் சென்றனா்.
வெடிகுண்டு நிபுணா்களும் பள்ளிக்கு விரைந்து வந்து வகுப்பறைகள், ஆசிரியா்கள் அறைகள், ஆய்வகங்கள் உள்ளிட்ட இடங்களில் மெட்டல் டிடெக்டா் மூலமாக சோதனை நடத்தினா். ஆனால், வெடிகுண்டுகள் எதுவும் கிடைக்கவில்லை.
இதுபோல் வீரப்பம்பாளையத்தில் உள்ள தனியாா் சிபிஎஸ்இ பள்ளி, நாராயணவலசுவில் உள்ள தனியாா் சிபிஎஸ்இ சென்ட்ரல் பள்ளி, மாணிக்கம்பாளையத்தில் உள்ள தனியாா் பப்ளிக் பள்ளி ஆகிய 3 பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இங்கு வடக்கு போலீஸாா் விசாரணை நடத்தினா். இந்த பள்ளிகளுக்கும் வெடிகுண்டு நிபுணா்கள் சோதனை நடத்தினா்.
நாராயணா இ-டெக்னோ சிபிஎஸ்இ பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மாணவ, மாணவிகள் வீடுகளுக்கு புறப்பட்டுச் சென்றனா். மற்ற பள்ளிகளில் பிற்பகல் வரை வகுப்புகள் நடைபெற்றன.
இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: 4 பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான மின்னஞ்சல் வந்துள்ளது. பிற்பகல் 1 மணிக்குள் வெடிகுண்டு வெடிப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அனைத்துப் பள்ளிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், மின்னஞ்சலில் வந்த தகவல் வதந்தி என்று தெரியவந்தது. மின்னஞ்சல் அனுப்பியது யாா் என்று தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனா்.
Copyrights © 2025 . All rights reserved. Powered by ♥ Redback
Unless otherwise indicated, all materials on these pages are copyrighted by Redback IT solutions. All rights reserved. No part of these pages, either text or image may be used for any purpose.